விலைரூ.55
முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்திய விண்வெளி
புத்தகங்கள்
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
விலைரூ.55
ஆசிரியர் : எம்.ஏ.பழனியப்பன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
பக்கம்: 112
"இந்திய அறிவியலின் மகாத்மாவாக எனக்குத் தோன்றினார் என்று ஏ.பி.ஜெ., அப்துல்கலாமால் குறிப்பிடப் பெற்றவரும், அறிவியல் அறிஞரும், சிறந்த நிர்வாகியுமான பேராசிரியர் விக்ரம் சாராபாய் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல்.நடன நங்கை மிருணாளினி என்பவரைத் திருமணம் புரிந்தவர் விக்ரம் சாராபாய். செயற்கைக் கோள்கள், ஏவுகணைகள் பற்றிப் படிப்போரும், ஆய்வு செய்வோரும் அறிவியலுக்கு இவருடைய பங்களிப்பினை உணர்வர். இவரே அணுமின்சார உற்பத்திக்கு அடிகோலியவர்.பல பொறுப்புக்களை ஏற்று, பொறுப்புடன் உழைத்த இவர், தன் உடல் நலத்தில் அக்கறை காட்டவில்லை.
இரவு பகலாக உழைத்த இவர், ஒரு நாள் பின்னிரவு படுக்கைக்குச் சென்றவர் இறந்துவிட்டமையை, மறுநாள் காலை பணியாளர்கள் கண்டறிந்தனர். 1919 ஆகஸ்டில் பிறந்த இவர், 1971 டிசம்பரில் மறைந்தார். இவருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டும், பத்மபூஷண் முதலிய விருதுகள் வழங்கியும், இந்திய அரசு சிறப்பித்துள்ளது.அறிவுப்பசி உள்ளவர்கட்கு, முன்னேற வழிகாட்டும் சிறந்தநூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!