விலைரூ.210
புத்தகங்கள்
Rating
பக்கம்: 268
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான மிகப் பழமையானது இன்றைய ஜெருசலேம். இப்பழமையான நகரத்தில் தான் எத்தனை சுவடுகள், மதங்களின் வரலாறு, மகான்களின் வரலாறு, எத்தனை எத்தனை போர்கள் என, பல நிகழ்வுகள் உள்ளடக்கிய நகரம் ஜெருசலேம்.யூத சமயம், கிருத்துவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களும் சங்கமிக்கின்ற புனித நகரம் ஜெருசலேம்.யூத மன்னர்கள் டேவிட்டும், சாலமனும் இந்த நகரம் உருவாவதற்கும், யூதர்களின் முதற்கோவில் கட்டப்படுவதற்கும் காரணமாய் இருந்திருக்கின்றனர்.
ஜெருசலேம் நகரில் தான் சிலுவையைச் சுமந்து சென்ற புனித பாதை இன்றைக்கும் தரிசிக்கும் நிலையில் உள்ளது.மெக்காவிலிருந்து ஜெருசலேம் வரை, நபிகள் நாயகம் சென்ற பயணத்திற்கு, "இஸ்ரா என்று இஸ்லாம் கூறுகிறது. இதையே இரவுப் பயணம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஆக ஏசுபிரானும், நபிகள் நாயகப் பெருமானும் தங்கள் திருவடிகளால் வருடிய புனித நகரம் ஜெருசலேம். இத்தகைய திருத்தலத்தில் போர் ஓலங்கள், அவலங்கள், இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஏற்றமும், வீழ்ச்சியும் மாறி மாறி இந்நகரை ஆட்கொண்டாலும், தலைநிமிர்ந்து இன்றைக்கும் நிற்கிறது ஜெருசலேம்.
இத்தகைய புனித நகரத்தின் வரலாற்றை, மிக அற்புதமாய் எழுதிப் படைத்துள்ளார் நூலாசிரியர். இன்றைய ஜெருசலேம் ஓர் அறிமுகம் எனத் துவங்கி, இருபதாம் நூற்றாண்டில் ஜெருசலேம் என, பத்துத் தலைப்புகளோடு நூல் நிறைவடைகிறது. வரலாற்றுப்பின்னணியில், பல செய்திகளை உள்ளடக்கி ஆய்வு நோக்கில் அமைந்திருக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள், நல்ல கட்டமைப்பு, வரலாற்று வாசகர்களுக்கு பயன் தரும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!