விலைரூ.150
புத்தகங்கள்
Rating
பக்கம்: 264
ஸ்ரீ வியாச பகவான் அருளிய - மகாபாரதம் - சாந்திபர்வம் - இரண்டாம் பகுதியில் - "மோட்ச தர்மம் பற்றிய விரிவுரைகளைக் காணலாம். இந்நூலாசிரியர், அப்பகுதியை அனைவரும் படித்துப் பயனடையும் வகையில், மிக எளிய தமிழில் இனிய நடையில் எழுதியுள்ளார்.
செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால் அந்தப் பாவத்திற்கு, "குணஹானி என்றும், செய்யக்கூடாததைச் செய்தால், அதற்கு தோஷம் என்று ஆசிரியர் விளக்குவதும் (பக்:3) சிறப்பானது எது எளிது? என்ற ஒரு கேள்விக்கு, ஐந்து பேரின் விடைகளை விளக்குவதும், (பக்: 14 - 18), சோகம் போக்கும் வழியை விளக்குவதும், (பக்: 20) என விளக்குவதும் (பக்83) மோக்ஷம் பெற ஒன்பது வழிகளைக் கூறுவதும், (பக்:120) ஆசிரியரின் நுட்பமான அறிவாற்றலுக்கு எடுத்து காட்டாகத் திகழ்கின்றன.ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பும் உள்ள அறிமுக உரையும், திருவாய்மொழி முதலிய நூல்களின் வைர வரிகளும், நூல் படிப்போர்க்கு இன்பமளிக்கும் எனக் கூறலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!