விலைரூ.365
புத்தகங்கள்
பத்துப் பாட்டு ஆராய்ச்சி
விலைரூ.365
ஆசிரியர் : மா. இராசமாணிக்கனார்
வெளியீடு: சாகித்ய அகடமி
பகுதி: தமிழ்மொழி
Rating
பக்கம்: 688
சங்க கால இலக்கியங்களில் மிகவும் பாராட்டிப் போற்றப்படும், நூல்களில் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் குறிப்பிடத்தக்கவையாகும். இவ்விரண்டின் வாயிலாக, கி.பி. முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரையில், தமிழகத்தில் நிலவிய அரசியல், மக்கள் வாழ்க்கை, விவசாயம், கைத்தொழில்கள், சமயம், நாகரிகம், பண்பாடு முதலியன குறித்து அறியலாம் என்பர்.
இந்நூலாசிரியர் மிகவும் முயன்று பத்துப் பாட்டின் ஆராய்ச்சியை, 35 தலைப்புகளில் செய்துள்ளார். அவற்றில், பத்துப்பாட்டின் காலம், ஐவகை நிலங்கள், தொண்டை, சோழ, பாண்டி நாடுகளின் ஊர்கள், முருகனுக்குரிய இடங்கள், மன்னர்கள், உணவும் உடையும், இல்வாழ்க்கை, சமயம், அழகுக் கலைகள், விலங்குகள், பறவைகள், நீர்நிலைகள் முதலியன படிக்கப் படிக்கப் பல்சுவை விருந்தாக உள்ளன.
நூலின் இறுதியில் அரிய சொற்களும், பிறமொழிச் சொற்களும் எனும் பகுதியும், பத்துப் பாட்டின் ஆசிரியர்களின் புலமைத் திறனும் எனும் பகுதியும் நூலாசிரியரின் நுண்ணிய அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.பயனுள்ள பாதுகாக்க வேண்டிய நூலாகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!