விலைரூ.225
புத்தகங்கள்
கொங்குநாட்டுக் கோயில்கள்
விலைரூ.225
ஆசிரியர் : கி.வெங்கிடாச்சாரி
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: ஆன்மிகம்
Rating
பக்கம்: 252
தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என, ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். கோவை, சேலம், தர்மபுரி கொங்கு நாடாகும். இங்கு உள்ள கோவில்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல்.
கோவில் வரலாறு, கல்வெட்டு, புராணம், சிற்ப நுட்பங்கள் ஆகிய பல்வேறு கோணங்களிலும் நேரிடையாகப் படங்கள் மூலமும், ஒவ்வொரு கோவிலாக நூலாசிரியர் நம்மை, கைபிடித்து அழைத்துச் செல்வது போல் எழுதியுள்ளார்.
கடந்த 1,300 ஆண்டுகளுக்கு முன் தேவாரத்தில் பாடிப் போற்றியஅவிநாசி,திருமுருகன்பூண்டி, பவானி, திருச்செங்கோடு, பாண்டிக்கொடுமுடி, வெஞ்சாமரக்கூடல், கரூர் கோவில்கள் கண்ணால் காண்பது போல் எழுதப்பட்டுள்ளன.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு சான்றாக விளங்குவது, கொங்கு நாட்டின் சீரங்கம் காரமடை ஆகும். பேய், பிசாசு, பில்லி சூனியம் தோஷ பரிகாரத் தலம் இது.கொங்கு நாட்டுத் தென் திருப்பதி, தான்தோன்றி மலை வெங்கடரமண சுவாமி கோவில். நாமக்கல் அனுமன் புகழ்மிக்க கோவிலில் உள்ளார். பொள்ளாச்சி மாரியம்மன், ஆனைமலை படுத்துக் கிடக்கும் மாசானி அம்மன், பண்ணாரி அம்மன், மருதமலை, பழனி முருகன் ஆகிய தெய்வத்தலங்கள் படிப்போரை ஆச்சரியப்படுத்துகின்றன. கொங்கு நாட்டு கோவில் களஞ்சியம் இந்நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!