விலைரூ.340
புத்தகங்கள்
வடநாட்டு சிவத்தலங்கள்
விலைரூ.340
ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: ஆன்மிகம்
Rating
பக்கம்: 450
பாரத திருநாட்டின் பழம் பெரும் செல்வங்கள் பக்தி வழிபாட்டு கோவில்கள், இந்திய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டும், இந்த கோவில்கள் பற்றிய அதிகமான செய்திகளை, இந்த நூலில் காண முடிகிறது.வடநாட்டில் உள்ள சிவத்தலங்கள், மாநில வாரியாக, விரிவாக படங்களுடன் தரப்பட்டுள்ளன.
அரியானா, அருணாசலப்பிரதேசம், அசாம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா முதல் ஜார்க்கண்ட் வரை, 16 வட மாநிலத் தலங்களை, இந்த நூலில் படித்து வணங்கலாம். அசாம் காமாக்யா கோவிலில் உள்ள, அம்மன் தரிசனத்தை, நீரில் இரு கைகளால் தடவிப் பார்த்து வழிபட வேண்டும்.
கங்கை நீர் மிகவும் புனிதமானது. ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமிக்கு கங்கை நீர் அபிஷேகம் நடக்கிறது. அக்பர், ஜஹாங்கீர் ஆகிய மன்னர்கள் கங்கை நீரையே குடித்தனர், குளித்தனர் என்பன போன்ற, பல செய்திகள் படிப்போரை பரவசப்படுத்தும்.ஆதிசங்கரர், 8ம் நூற்றாண்டில் செய்த ஆன்மிக மறுமலர்ச்சியும், அமைத்த மடங்களும், கேதார்நாத்தில் உள்ள சமாதியும், படங்களும் தரப்பட்டுள்ளன.வடநாட்டு சிவாலய தரிசனக் கையேடு!
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!