விலைரூ.300
புத்தகங்கள்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
விலைரூ.300
ஆசிரியர் : சோ.சேசாசலம்.
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: சட்டம்
Rating
பக்கம்: 384
இன்றைய காலக்கட்டத்தில், சட்ட அறிவு என்பது அதிலும் குறிப்பாக குற்றவியல் சட்ட அறிவு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகாரங்கள், கைது செய்தல், காவல் துறையின் அதிகாரங்கள், வழக்குகளை விசாரணை செய்தல், தண்டனை வழங்குதல், மேல் முறையீடு, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் இப்படிக் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள் யாவும், சமீபத்தில் திருத்தங்களையும் உள்ளடக்கி, எளிய தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சுமார் 50க்கும் மேற்பட்ட, சட்டப் புத்தகங்களைத் தமிழில் தந்துள்ள, மூத்த வழக்கறிஞர் சேசாசலத்தின் இந்நூல், சட்ட மாணவர்களுக்கு மட்டுமின்றி, சட்டம் அறிந்து கொள்ள விழையும் சாதாரணமானவர்களுக்கும் புரியும்படி, நல்ல முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. நர்மதா பதிப்பகம், வழக்கம் போல் அழகிய கட்டமைப்பில், இதை வெளியிட்டுள்ளது நல்ல வரவேற்பைப் பெறும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!