விலைரூ.200
புத்தகங்கள்
அருளிச்செய்த அமுதமும் தொல்புகழ் அமுதமும்
விலைரூ.200
ஆசிரியர் : என்.எஸ்.கிருஷ்ணன் சுவாமி
வெளியீடு: ஸ்ரீ வரமங்கை பதிப்பகம்
பகுதி: முத்தமிழ்
Rating
பக்கம்: 398
"கற்பார் இராம பிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று நம்மாழ்வார் கூற்றுக்கிணங்க, இன்று, தமிழகத்தில், கம்ப ராமாயணம் மிக்க சிறப்புடன் திகழ்கிறது. அக்கம்பராமாயணப் பாடல்களில், பல ஆழ்வார்கள் பாசுரங்களின் தாக்கம் எப்படிப் பொதிந்துள்ளது என்பதை, இந்நூல் விரிவாகக் கூறுகிறது எனலாம்.
இந்நூலில், பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை, கம்பன் பாடல்கள் பலவும், ஆழ்வார்கள் பாசுரங்களின் சாயல்கள் இருப்பதை, நூலாசிரியர் மிக அழகாக விளக்கியுள்ளார்.ஆழ்வார்கள் பாசுரங்களின் சொற்களும், கருத்துக்களும் கம்பனின் உணர்வினில் அழுத்தமாகப் பதிந்து, அவரின் பாடல்களில் வெளிப்படுகிறது என்பதை,
இந்நூல் விரிவாக விளக்குகிறது.நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற கல்வி அறிவை நூல் முழுவதும் தெளிவாகக் காண்கிறோம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!