பாரத நாட்டின் இதயம் சமயங்களில் உள்ளது என்று விவேகானந்தர் கூறினார். சைவ சமயமும், வைணவ சமயமும் பாரத நாட்டின் இரு கண்கள் எனலாம்.
இந்திய வைணவ இலக்கியம் உருவாவதற்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் முதல் ஆதார நூலாகச் செயல்பட்டது குறித்தும், ஆழ்வார்களின் தத்துவக் கருத்துக்களையும் பக்தி சாதனையையும், இலக்கிய நயத்தையும் இந்நூலாசிரியர் நுண்மாண் நுழைபுலம் கொண்டு விளக்கியுள்ளது படிப்பதற்கு மிக்க இன்பமாக உள்ளது. மலையாள, கன்னட, தெலுங்கு, மராட்டி, குஜராத்தி, இந்தி, சவுராஷ்டிரா ஆகிய மொழிகளின் வைணவ இலக்கியங்கள் குறித்தும் நூலாசிரியர் விளக்குவது அவரது கடின உழைப்பிற்குச் சான்றாகும். ஒரு பக்திக் கலைக்களஞ்சியமாக விளங்கும் இந்நூலை, ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து பயன் அடையலாம்.
- டாக்டர் கலியன் சம்பத்து