எழுத்து மூலம் மற்றவர்களை மகிழ்விக்க விரும்பும் ஆசிரியர் வட்டார ஏடுகளில் எழுதிய, 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தங்கத்தின் மீது எல்லாருக்கும் இருக்கும் பற்று, அதில் ஏற்படும் அபரிமித சிக்கல்களை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியுள்ளார்.
அது மட்டும் அல்ல, புது வருஷ டைரி, காலண்டர்களுக்கு ஆசைப்படும் விஷயத்தை, ‘தம்பையாவுக்கு வைத்த செக்’ மற்றும் கொசுத் தொல்லையை வைத்து, எழுதப்பட்ட கட்டுரையில், கூடங்குளம் மின் உற்பத்திக்கு நாராயணசாமியை கேளுங்க என்ற கருத்தும், நகைச்சுவை உணர்வை பிரதிபலிப்பதாகும். இவரது எழுத்துக்களில் அங்கத உணர்வு இழையோடுவதால், மத்திய தர மக்களை நிச்சயம் ஈர்க்கும்.