வடக்கு குஜராத்தில் வாடுநகர் என்ற சிற்றூரில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்த மகன்லால் ரான்சோத்தாஸ் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர், நரேந்திர தாமோதர்தாஸ் என்னும் நரேந்திர மோடி. இளமைக் கல்வி முடிந்து கல்லூரியில் சேர்ந்து, ஒரு ஆண்டிற்குள் உண்மையான ஞான ஆனந்தத்தை தேடிப் புறப்பட்டவர். 1972 வாக்கில் ஆர்.எஸ்.எஸ்.பிரச்சாரகர் ஆனார். பின், 2008ம் ஆண்டில் கடுமையான எதிர்மறைப் பிரசாரங்களையும் மீறி அமோக வெற்றி பெற்று, குஜராத் முதல்வராக மூன்றாவது முறை பதவி ஏற்றது வரை, அவரது வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
குஜராத்தில் நரேந்திர மோடியின் பல திட்டங்கள் எப்படிச் செயலாக்கப்பட்டுப் பலனை நல்குகின்றன என்பதை, நேரில் கண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் மொத்தத்தில் இந்தத் தேர்தல் நேரத்தில், மோடியின் புகழ் பாடும் ஒரு நூல்.
சிவா