பூலித்தேவனின், வீர வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள சரித்திர நாவல். மதுரையை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கரால், பூலித்தேவனின் வீரம் மெச்சப்படுகிறது. காலமாற்றம், ஆற்காட்டு நவாபுகளால் ஏற்படும் அரசியல் மாற்றம், ஆங்கிலேயர் கை ஓங்குதல், பாளையக்காரர்களின் எதிர் யுத்தம் மற்றும் வீழ்ச்சி எல்லாம் விரிவாகப் பேசப்படுகிறது இப்புதினத்தில். நவாப் மற்றும் ஆங்கிலேயர் சார்பில், நெல்லைச் சீமையில் வரி வசூலிப்பு தர்பார் நடத்தும் மருதநாயகம், பூலித்தேவனை அடக்கவோ, வெற்றி பெறவோ முடியாமல் தத்தளிக்கும் நிலைகள் சுவாரசியமாக விவரிக்கப்படுகின்றன. வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றை வெளிக்கொணருகிறது இந்த நாவல்.
அகிலா தேவி