கி.பி., 606 முதல் 41 ஆண்டுகள், ஆட்சி செலுத்தியவர் ஹர்ஷர்.
* ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்ற முப்பெரும் இலக்கியங்களை எழுதியதால், ஹர்ஷரின் புலமை விளங்கும்.
* இவரது ஆட்சியில், நிலவரி நீக்கப்பட்டது.
* பெற்றோரை வணங்க தவறினால் அது குற்றம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
* உயிர் கொலை தடை செய்யப்பட்டு, புலால் உண்ணுவதற்கு தண்டனை தரப்பட்டது.
* மது, சூது, புலால், ஆகியவை மன்னிக்க முடியாத குற்றமாக்கப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டன.
* மருந்து, உணவு, நீர், உடை ஆகியவற்றை எல்லா மதப்பிரிவினருக்கும் அளித்தார்.
இவை எல்லாம், சீனப் பயணி, யுவான் சுவாங், ஹர்ஷர் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் கூறியுள்ளவை. நேபாளம், இவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக இந்த நூலில் கூறப்படும் வரலாற்று செய்தி, வியப்பு அளிக்கிறது.
முனைவர் மா.கி.ரமணன்