ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவானந்தனுக்கு சகாதேவன் என்ற மகனும், அருந்ததி, பூங்கோதை என, இருமகள்களும் உள்ளனர். சிவானந்தன் தமது பிள்ளைகளை மிகுந்த கண்டிப்புடனும், ஒழுக்க போதனைகளுடனும் வளர்க்கிறார்.
ஆனால், வாழ்க்கை சூழல், அவர்களுக்கு வேறு எத்தனையோ நெளிவுசுளிவுகளை கற்று தருகிறது. காதல் அனுபவங்களும் ஏற்படுகின்றன.
இந்த பின்னணியில் கதை சொல்லப்பட்டாலும், நாம் வெளிப்படையாக பேச தயங்குகிற, பிள்ளைகளிடம் பெரிதும் மறைத்து வைக்கிற பாலுணர்வு தொடர்பான ஏராளமான விஷயங்களை, பாத்திரங்களின் உரையாடல் வாயிலாக ஆசிரியர் அலசுகிறார்; விரித்துரைக்கிறார்.
பெண்ணாதிக்கம், ஆணாதிக்கம் என்று சமூக விமர்சனங்கள் பேசினாலும், இந்த நவீனம், பாலியல் பாடபோதனை நூல் என்று கூறத்தக்க அளவு அந்த விஷயங்களையே அதிகம் பதிவு செய்துள்ளது.
எல்லை மீறாத நாசூக்குடன் எடுத்துரைப்பதால், படைப்பின் தரம் உயர்வானதாக திகழ்கிறது.
கவுதம நீலாம்பரன், எழுத்தாளர்