லட்சிய நடிகர், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் சுயசரிதை நூல் இது. தமிழக நடிகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களால் எழுதப்பட்டவை அல்லது மற்றவர்கள் எழுதியவை. எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதை மட்டும்தான், அவராலேயே எழுதப்பட்டு வெளியாகி உள்ளது. தமிழக திரையுலகை ஆட்சி செய்தவர்களில் பெரும்பான்மையோர், தென் தமிழகத்தை சார்ந்தவர்கள்.
அவர்களில், சேடப்பட்டியை சேர்ந்த, ராஜேந்திரன் முதன்மையான வர். கடந்த கால மற்றும் நிகழ்கால தமிழகத்தின் பிரபலங்களின் வாழ்வின் ஏற்றத்திலும், தாழ்விலும் உடன் இருந்தவர் எஸ்.எஸ்.ஆர்., ஆனால், தனக்கமைந்த அந்த வாழ்வின் முக்கியத்துவத்தை வெறும் பரபரப்பு செய்தியாக மட்டும் எழுதாமல், மிகப் பொறுப்புணர்வோடு வாசகனுக்கு தெரியவேண்டிய வரலாறாக எழுதியுள்ளார். லட்சிய நடிகரான எஸ்.எஸ்.ஆரின் மரணமும், ஒரு முக்கியமான நாளில் அமைந்தது. ஆம். இந்தியாவின் முதல் சுதந்திர போருக்கு வித்திட்ட மருதுபாண்டியர்கள், 1801ம் ஆண்டு, திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டு, 213 ஆண்டுகள் முடிந்த இந்த அக்டோபர் 24ம் தேதி தான், எஸ்.எஸ்.ஆர்., தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட நாளும். காலம் ஒரு சக்கரம் தான்.
டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.,