தேம்பாவணியையும், ரட்சணிய யாத்திரிகத்தையும் மட்டும் கிறித்தவ காப்பியமாக பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு, 30 கிறித்தவ காப்பியங்களை அறிமுகம் செய்துள்ளார், நூலாசிரியர். தேம்பாவணிக்கும், ரட்சணிய யாத்திரிகத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் மட்டும், எட்டுக் கிறித்தவ காப்பியங்கள் படைக்கப்பட்டு உள்ளன. கிறித்தவ மதத்தை சாராத கண்ணதாசன் போன்ற கவிஞர்களும், கிறித்தவ காப்பியங்களை படைத்துள்ளனர் என்பதை, இந்த நூல் காட்டுகிறது. ஒவ்வொரு காப்பியத்தை பற்றிய அறிமுகத்தையும், சிறந்த பாடல்களையும், காப்பியம் தோன்றிய காலத்தையும் வழங்கி உள்ளதால், இந்த நூலை படித்து முடிக்கும்போது, 30 கிறித்தவ காப்பியங்களைப் படித்து முடித்த முழுமை ஏற்படுகிறது. தமிழ் ஆய்வுக்களத்திற்கு, இது புதுவரவு. இத்தகைய நூல்கள், எல்லா சமயங்கள் சார்ந்தும் எழுதப்பட வேண்டும். கிறித்தவ இலக்கிய வரலாற்றை எழுதுவோருக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும்.
முகிலை ராசபாண்டியன்