சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப் பெறுகின்றன. அந்த வகையில் பா.முருகானந்தம், 15 சிறுகதைகளை, ‘அச்சுவெல்லம்’ எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான. ‘அச்சுவெல்ல’த்தில், பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது.
‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பு இயல்பு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் சரியாகற வரைக்கும் அதோடயே வாழ பழகிக்கறது நல்லது’ என்ற, டாக்டரின் மந்திர சொற்கள் வாழ்வியல் யதார்த்தம்.
ஒவ்வொரு சிறுகதையும் ஒரு இனிய இசைபோல் ரீங்காரமிடுகிறது.
– சசி பிரபு