பதினோராவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, பரபரப்பாக நடைபெறும் இந்த நேரத்தில், கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளை உள்ளடக்கி, வெளிவந்திருக்கும் புத்தகம். கடந்த, 1975 முதல், 2011 வரையிலான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
கடந்த, 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்த மைதானம், போட்டி அட்டவணை, வெற்றி பெற்ற அணி என, லீக் சுற்றில் இருந்து, இறுதி ஆட்டம் வரை தொகுக்கப்பட்டுள்ளது. போட்டி குறித்த பார்வைகளும், வீரர்களின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது சிறப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ‘மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், எப்போதும் பவுண்டரிகளை தான் விரும்புவர். அவர்களுக்காக விளையாடுவதாக இருந்தால், தோற்கத் தான் வேண்டும். எப்போது, ரசிகர்களுக்காக பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்போது தேசத்திற்காக விளையாடுகிறோம் என்பது மறந்து விடும்’ என்றார். (பக்.102)
இந்திய அணியின் இறுதிப் போட்டி பற்றிய செய்திகள், ஒரே கட்டுரையாக இருந்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். இறுதிப்போட்டி பற்றிய செய்திக்கு பின், கால் இறுதி ஆட்டம் பற்றிய தகவல் வருவது வாசிப்பை தடுக்கிறது. கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பவர்களுக்கு, இந்த புத்தகம் பிடிக்கும்.
சி.சுரேஷ்