நமக்குக் கிடைத்திருக்கும் ஜோதிட நூல்களில், மிக மிகப் பழமையானவை என்று சொல்லத்தக்கவை, சர்வார்த்த சிந்தாமணி, ஜோதிட அலங்காரம், பிருகத் ஜாதகம் எனப்படும் மங்களேசுவரியம் ஆகியவையே. ஜோதிடத்தின் பிதாமகர் என்று சொல்லத்தக்கவர்,
வராஹமிகிரர். அவர் வடமொழியில் இயற்றிய, ஒப்பற்ற நூல் தான், பிருகத் ஜாதகம் எனும் மங்களேசுவரியம். இதற்கு தெலுங்கில் உரை கண்டவர் திருவேங்கடாச்சாரியார்.
தெலுங்கிலிருந்து தமிழுக்குச் செய்யுளாகவும், பின், அதற்குப் பொருளுரையும் செய்தவர் வைத்தியலிங்கப் பத்தர். மொத்தம், 27 அத்தியாயங்களில், 1,302 செய்யுள்களில் ஜோதிடத்தின் அனைத்து அங்கங்களும் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
ஜோதிடத்தை தொழிலாகக் கொண்டவர்களுக்கு, இந்த நூல் மிகவும் பயன்படும். ஜோதிடத்தைக் கற்க விரும்புவோர், தகுந்த ஆசான் வழிகாட்டலில் இந்த நூலை பயிலலாம்.
மயிலை சிவா