ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். இதில், மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன. கிராமத்து கதைகள், காதல் கதைகள், குடும்ப உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் என்று கதம்பமாக தொகுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கதைகள், மனித வாழ்வில் அன்றாடம் நிகழக்கூடிய, பார்த்து அனுபவித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே புனையப்பட்டுள்ளன. அதுவே சிறுகதைகளோடு ஒன்றிப்போகவும் செய்கிறது.
எல்லா பெண்களுக்கும் உரித்தான ஆசாபாசங்களை கொண்ட அகிலா, அரித்ரோ, மகள் சம்பாத்தியத்தில காலம் தள்ளும் அப்பா என, கடித
வடிவத்தில் எழுதிய ‘என் அம்மாவுக்கு...’ சிறுகதை வழக்கொழிந்து விட்ட கடிதம் எழுதும் முறையை ஞாபகப்படுத்துகிறது.
‘பேஸ்புக் பெண்ணும், செல்போன் நம்பரும்’ கதை இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை அழகாக முன்வைக்கிறது. புறஅழகில் மயங்கும் இன்றைய இளைஞர்கள், எப்படி ஏமாற்றப்பட்டு, ஆத்திரமும் கழிவிரக்கமும் கொள்கின்றனர் என்பது, நன்றாக சொல்லப்பட்டிருந்தது இன்றைய தேதியில், பெண்கள் ரொம்பவே கஷ்டப்படுகின்றனர், அழுது துடிக்கின்றனர் என்பதை, அட்டையிலேயே குறிப்பிட வேண்டுமோ?
ஸ்ரீநிவாஸ் பிரபு