வீட்டு பட்ஜெட்டை சமாளிக்கும் வழிகளை, பொருளாதார மேலாண்மை வல்லுனரான, சோம வள்ளியப்பன் எளிய நடையில் விவரித்துள்ளார்.
‘குமுதம் சினேகிதி’யில், தொடராக வெளிவந்து, இல்லத்தரசிகளின் பாராட்டுகளை பெற்ற கட்டுரைகள், நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
வாசகரோடு பேசும் உத்தியில் எழுதப்பட்ட கட்டுரைகள், ‘அட’ போட வைக்கின்றன. வாழ்க்கை விளையாட்டில் வெற்றி என்ற கட்டுரை முதல், செலவு என்ன, பயன் எவ்வளவு என்பது வரை, மொத்தம், 20 கட்டுரைகள் உள்ளன.வீட்டு செலவுகளை எப்படி பிரித்து எழுத வேண்டும். தேவையில்லாதவற்றை வாங்குவதை நிறுத்துங்கள், நோஷனல் பர்சேஸ், பொருளுக்கு தான் விலை கொடுக்க வேண்டுமே தவிர, அதன் ‘பிராண்டு’க்கு இல்லை போன்ற, ‘டிப்ஸ்’ கள் இந்த நூல் முழுக்க நிறைந்திருக்கிறது.
நம் வீட்டில் எதற்கெல்லாம், அனாவசியமாக செலவு செய்கிறோம் என்பதை, நம்முடன் இருப்பவர் கூறுவது போல அமைந்திருக்கிறது. கடன் வாங்காமல் வாழ விரும்புவோர், இந்த நூலை படித்து பின்பற்றலாம்!
சி.கலாதம்பி