தமிழக அரசின் ‘பாரதி விருது’ பெற்ற, அறிஞர் பெ.சு.மணியின், பாரதி பற்றிய ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்கள். முதல் பாகத்தில் 19 கட்டுரைகளும் அடங்கி உள்ளன.
முதல் பாகத்தில் குறிப்பிடத்தக்கவை:
* பாரதியாரின் சிறுகதைகள், நாவல்களில் வெளிப்படும் சமகால உணர்வுகளை ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர்.
* பாரதி தனது ‘பொன்வால் நரி’ எனும் ஆங்கில கதையில், சமகால நிகழ்ச்சிகளை விமர்சித்துள்ளார் (பக்.72–85)
* கடல் பற்றிய பாரதியின் தத்துவ நோக்கு (பக் 277 – 278), ‘சித்தக்கடல்’ எனும் குறிப்புகளில் இருந்து விளக்கப்பட்டுள்ளது.
* பாரதியோடு, சுப்ரமணிய சிவா, அரவிந்தர், கல்கி, கபிலர் ஆகியோரின் உறவுகளையும், உணர்வுகளையும் மிக அருமையாக விளக்கி உள்ளார் ஆசிரியர்.
ஜே.ஆர்.இலட்சுமி