கதாநாயகி, ஒரு மர்ம பங்களாவிற்குள் நுழைகிறாள். அமானுஷ்யமான அனுபவங்கள், அவளுக்கு ஏற்படுகின்றன. ‘அடக்கி வைத்திருந்த பயம், பீறிட்டு மேலெழுந்தது. காற்றில் பட்பட்டென்று அடித்துக்கொண்ட ஜன்னல்களின் சத்தம், இரவின் அமைதியைக் கிழித்தது. அப்போது, மெதுவாய், மிக மெதுவாய் அந்த வீணை இசை கேட்டது. அதுவரை இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் விடைபெற்றுக் கொள்ள, உடலில் திகில் பரவ, செயலற்றுப் போனாள். மூச்சு திணறியது. அப்போது பெரும் ஓசையுடன் இடி இடித்து மழை பெய்ய மின்னல் பளீரிட்டது.
கை ஊன்றி எழுந்தவளின் கை, எதன் மீதோ பட்டு இடற, சட்டென்று கையை உருவிக் கொண்டாள். பளீரிட்ட மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது அந்த தலை. நிலைகுத்திய அதன் விழிகளைக் கண்டு வீறிட்டு அலறிய ஸ்வேதா, தலை சுற்றி தடாலென கீழே விழுந்தாள்’ ஹிட்ச்காக் படம் பார்ப்பது போன்ற உணர்வு; திகில் நாவல்; முடிவு சுபம் தான்.
– எஸ்.குரு