சில்லரை வர்த்தகங்களால் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. தள்ளுவண்டி – வேர்க்கடலை வியாபாரி முதல், தானியங்கி இயந்திரங்கள் விற்பவர் வரை, சில்லரை வர்த்தகம் தான். இணையவழி விற்பனையையும் உள்ளடக்கி சக்கைபோடு போடும் இந்த
சில்லறை வர்த்தகம், சுலபமான வியாபாரம் போல தோன்றினாலும், இதற்குள்ளும் சூட்சுமங்கள் மண்டி கிடக்கின்றன.
இந்த நூல், சில்லரை வர்த்தகம் என்றால் என்ன? என்ற மிக எளிமையான கேள்வியில் துவங்கி, ஒரு பொருளின் விலைக்கேற்ற உண்மையான மதிப்பை அறியும் மனோநிலை, வர்த்தகத்தின் அளவீடுகள், அவற்றிலுள்ள சிக்கல்கள், தீர்வுகள், நவீன சில்லரை வர்த்தக பூதாகாரத்தின் தாக்கம், அதிலுள்ள போட்டிகள், நுகர்வோர் தேவைகள், நாட்டங்கள், கொள்முதல் பேரங்கள், அரசாங்க சட்டங்கள், விதிகள், சந்தைப்படுத்தும் திறன், இலக்குகள் நிர்ணயித்தல், மதிப்புக் கூட்டல்கள், மாறிவரும் தேவைகள், வாடிக்கையாளர் சேவை, இவற்றையெல்லாம் எடுத்து செல்லத்தேவையான தலைமை பண்புகள், என்று எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒரு நல்ல செய்திப் பெட்டகமாக விளங்குகிறது.
– கவிஞர் பிரபாகரபாபு