கடந்த, 1779 முதல், 1815 வரை எழுதப்பட்ட, 31 கடிதங்களின் தொகுப்பு. எலிஸா எனும் ஆங்கிலேயப் பெண்மணி, கப்பல் மூலமாகவும், தரை வழியாகவும் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தது வரை பட்ட துன்பங்களும், இன்பங்களும், கடிதங்களாய் எழுதப்பட்டுள்ளன.
கள்ளிக்கோட்டை ஹைதர் அலியின் ஆட்சியின் கீழ் இருந்ததால் எலிஸாவும், அவரது கணவரும், மற்றவர்களும் சிறைப்படுத்தப்பட, சோகத்திலிருந்து விடுதலை வழங்கியது, மெட்ராஸ் எனும் சென்னை.பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்கள் பல்லக்கில் பயணம் செய்ததும், மெழுகுவர்த்தி ஒளியில் ‘கோட் – சூட்’கள் தைக்கப்பட்டதும் ஆங்கிலேயர்கள் பிழைப்புக்கான இடமாகச் சென்னையை உணர்ந்ததும், அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புனித தாமஸ் எனும் தூதர், சின்னமலையில் ஈட்டியால் குத்தப்பட்டதும், அவர் புனித தாமஸ் மலையில் இறந்ததும் எழுதப்பட்டுள்ளன. 18ம் நூற்றாண்டில் தமிழரின் கல்விமுறையும், வாழ்க்கை முறையும் எப்படி இருந்தது என்பதை, ஓர் ஆங்கிலேயப் பெண்ணின் கண்களால், இந்த நூல் காட்டுகிறது. மொழிபெயர்ப்பு என, தோன்றாத அளவிற்கு, எளிமையான தமிழ் நடை.
முகிலை ராசபாண்டியன்