மனித வாழ்வில் பிரிக்க முடியாத அம்சம் இயற்கை. அறிவியலின் வருகைக்கும், வளர்ச்சிக்கும் பின், இயற்கை சீரழிக்கப்பட்டது. காடுகளை அழித்தும், நீர்நிலைகளை ஆக்கிரமித்தும், கானுயிர்களை வேட்டியாடி அருகச் செய்தும் அவற்றின் வாழ்வாதாரங்களைப் பறித்தும் இயற்கையை நாசப்படுத்தி வருகிறோம்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொருவரும், இதற்கு காரணமாக இருக்கிறோம். இந்த நூல் வாயிலாக, இயற்கையை, காட்டுயிர்களை, பறவைகளை நேசித்தலின், பாதுகாத்தலின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறார், நூலாசிரியர்.
நாம் வாழும் பூமி நமக்கான வசிப்பிடம் என்பதை உணர்ந்து, நம் வருங்கால சந்ததியினருக்கு அதன் தூய்மையும், வளங்களும் கெடாமல் பாதுகாப்பாக ஒப்படைக்க, நாம் கவனம் கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டின், ‘சிறந்த சுற்றுச்சூழல் நூல்’ விருது பெற்றுள்ளது இந்தப் புத்தகம். மனித நேயம் என்பது சக உயிரினங்களை, இயற்கையை, பறவைகளை நேசிப்பதிலும்தான் உள்ளது. இயற்கையை நேசிப்போம்; பாதுகாப்போம். நாம் வாழும் உலகம் நலமாகட்டும்.
-பி.வி.சுதாகர்