இன்றைய இந்தியாவில் உயர்கல்வியில், மாணவர்கள் அறிவியல் துறையை தேர்ந்தெடுப்பது குறைந்து கொண்டே வருகிறது. கணிதம் மற்றும் அறிவியல் புரிதல் குறித்து நடந்த சர்வதேச ஆய்வில், சீனா முன்னணி வகிக்க, இந்தியாவோ கடைசி இடத்திற்கு, கிர்கிஸ்தானோடு போட்டியிட்டது. இந்திய அரசு தனது ஒட்டுமொத்த, ஜி.டி.பி.,யில், வெறும், 0.8 சதவீதத்தை மட்டுமே அறிவியல் வளர்ச்சிக்கு செலவழிக்கிறது. சீனா, 1.44 சதவீதம், தென்கொரியா, 3.21 சதவீதம் செலவழிக்கின்றன.
சமீபகாலம் வரை, சந்தைப் பொருளாதார வழியின் அடிப்படையில் உயர்கல்வியை விரிவாக்கம் செய்து வந்த சீனா, உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எதிர்காலத்தில், அரசே முதலீடு செய்து வளர்ப்பது என்ற கொள்கைக்கு வந்துள்ளது. இங்கு கல்வித் துறை, தனியார் மயமாகி வருகிறது. அறிவியலில் நாம் பின்தங்கியுள்ளது, அடைய வேண்டிய இலக்கு குறித்து பல தரவுகளின் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
புலவர் சு.மதியழகன்