பிரபல ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளரான கோபிநாத், நக்கீரன் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. நாம் கவனிக்காத, கவனிக்க வேண்டிய பல விஷயங்களை கட்டுரைகளாக தந்திருப்பதாக கூறுகிறார். உண்மைதான்.
நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘பாஸ்புக்’. கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகமாகி விட்ட இன்றைய சூழலில் பிரிந்து செல்வதற்கான காரணங்களை மட்டுமே தேடுகிறோம். ஆனால் சேர்ந்து வாழ்வதற்கான காரணங்கள் எத்தனை இருக்கின்றன என்பதை பார்க்க தவறி விடுகிறோம்.
திருமணமான முதல்நாள் அம்மாவின் யோசனைப்படி, ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்திலும் தம்பதிகள் யதார்த்தமாக பின்பற்றிய ஒரு விஷயம், கருத்து வேறுபாடு வந்த போது அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான காரணங்கள் எத்தனை இருக்கிறது என்பதை புரிய வைக்கிறது. உற்சாகம் ஊட்டும் நூல்.
கீதா