மகாத்மா காந்தியடிகள் நினைவாக கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் தொடங்கி, சுதந்திரப் பொன்விழா, குடியரசுப் பொன்விழா நினைவுத் தூண், சட்டசபை வைரவிழா நினைவு வளைவு, மகாமகம் கலையரங்கம் ஈறாகத் தமிழக அரசு அமைத்துள்ள நினைவகங்களை, படங்களுடன் அவற்றின் வரலாற்றையும் சுருக்கி உள்ளடக்கமாக, 71 தலைப்புகளில் தந்துள்ளார் நூலாசிரியர்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை செய்ய வேண்டியதை, அதில் பணியாற்றிய நூலாசிரியர், தனிப்பட்ட முயற்சியில் செய்துள்ளது பாராட்டுக்குரியதாகும். மாணவர்கட்கும், சுற்றுலா செல்பவர்கட்கும் பயனுள்ள நல்ல நூல். இதில் உள்ள தகவல்களை, மாவட்ட வாரியாக பிரித்து தொகுத்திருந்தால் நல்ல வழிகாட்டி நூலாகவும், பொதுஅறிவிற்கான எளிய பயன்பாட்டு நூலாகவும் சிறந்து விளங்கும்.
சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், வருங்கால சந்ததியினருக்கும் ஒரு வழிகாட்டி நூலாகும். நூலாசிரியரின் பணி வரவேற்கத்தக்கது.
பின்னலூரான்