‘எனக்காக, நான் பேச ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், எனக்காக பலர் பேசியும், புகைப்படம் எடுத்தும் தங்களின் சுயநலத்துக்காக பலரும் பயன்படுத்திக் கொண்டனர். தாங்க முடியாத துயரங்கள், அவமானங்களை அனுபவித்த அப்பாவி பெண்ணான என்னை, பலரும் திட்டி, பழித்து, கேவலப்படுத்தினர்.
‘உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும், எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், குற்றவாளியாகவுமே பார்த்தது. மொத்தத்தில், நான் செய்ததெல்லாம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான பழி’ இப்படிப்போகிறது பூலான்தேவியின் புத்தகம். வலியோடு உண்மை பேசும் நூல்.