திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி.குகநாதனின், திரையுலக வாழ்க்கை வரலாற்றை, சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியா – இலங்கை இடையே உள்ள பல தீவுகளில், ஒன்றான, புங்குடு தீவில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்து, அவரின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் அளவுக்கு உயர்ந்தவர் குகநாதன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவரை, மடைமாற்றி விட்டவர், அண்ணாதுரை. எம்.ஜி.ஆருக்காக, எடுத்த திரைப்படம், தெலுங்கு திரையுலகில் செய்த சாதனைகள் என, அவர் வாழ்வில் நடந்த பல்வேறு சுவையான சம்பவங்கள், இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், இழப்புகள், கோபங்கள் என, அனைத்தையும், அப்படியே விவரித்திருக்கிறார், ராணி மைந்தன். பழைய திரைப்படங்களில் ஆர்வம் உள்ளோர், இந்த நூலை ஒரே மூச்சில் படித்து விடுவர்.
சி.சுரேஷ்