அனுபவம் சார்ந்த வெளிப்பாடாக வந்திருக்கிறது இத்தொகுப்பு. இதில் மொத்தம், 15 சிறுகதைகள் உள்ளன. சில கதைகள், சென்னை நகர பின்னணியிலும், சில கதைகள் ஐரோப்பியப் பின்னணியிலும், ஓரிரு கதைகள் பெல்ஜியத்தில் துவங்கி, சென்னைக்கு வருவதுமாகவும் இருப்பது புவியியல் ரீதியாக வசீகரிக்கிறது; மனிதர்களுக்கு இடையே ஆன பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றியும் பேசிச் செல்கிறது.
சில கதைகள் புலம்பெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் சந்திக்கும் பிரச்னைகளை அதிகம் பேசுகின்றன. அதேநேரம், இரு வேறு கண்டங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சியாக, உருமாறியும் நிற்கின்றன.
முன்னுரையில் சைக்கிள் வாங்கிய அனுபவம் ஒன்றைச் சொல்கிறார். அதுகூட அழகான சிறுகதையாகத்தான் இருக்கிறது. அந்த வகையில், தேடல் சுவாரசியமானதாகவே இருக்கிறது.
ஸ்ரீநிவாஸ் பிரபு