பண்டைத் தமிழின் பெருமை. குமரிக் கண்டம் இருந்தது என்பதைக் கிரந்த ஆகமம் தெரிவிக்கிறது என்றும், அந்தக் கண்டம் மூன்று பிரிவுகளாக இருந்தது என்றும் இந்த நூலின் முதல் கட்டுரை தெரிவிக்கிறது.
குமரி, ஆறு, குமரி மலை, பறுளி ஆறு பற்றியும், சிவன், திருமால், காளி முதலான வழிபாடு பற்றியும் தெரிவிக்கும் செய்திகள் நம் காதில் தேனாகப் பாய்கின்றன. தொல் தமிழ் எழுத்து தான் பிராமி எழுத்து என்றும் இந்த நூல் நிறுவுகிறது.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருளும் தமிழைப் பிறப்பிடமாகக் கொண்டவை என்பதை விளக்கும் ஆசிரியர், அதற்குத் தொல்காப்பியத்தையும் துணைக்கு அழைத்து விளக்கியுள்ளார்.
கூத்தர், பாணர், பொருநர், விறலியர், பாடினியர், சூதர் முதலான கலைஞர்களின் வாழ்வியல் குறித்த செய்திகளையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.
22 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூலில், 4 கட்டுரைகள் தவிர மீதமுள்ள அனைத்துக் கட்டுரைகளும் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலையும், இலக்கிய இலக்கணப் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.
முகிலை ராசபாண்டியன்