பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய மனிதன் ஒருவனும் அதில் அமர்ந்ததேயில்லை. இந்த நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களின் கதையை சொல்ல முயல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் சிறையில் அடைக்க இடம் இல்லாமல் போய் விட்டதால், அவர்களுக்கென ஒரு சிறு நகரை உருவாக்கி இருந்தனர். அந்த நகரை காலா என அழைத்தனர்.
சில குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு அழைக்கப்படாமலேயே, 30, 40 ஆண்டுகள் காலாவில் கழித்திருக்கின்றனர். சிலர் காலாவினுள் இறந்தும் போயிருக்கின்றனர். இறந்தவர்களை உள்ளேயே புதைத்து விடுவதால், யார் இறந்து போனார்கள் என வெளி உலகிற்கு தெரியவே தெரியாது.
இதுபோன்ற அப்பாவிகள், சாமானியர்கள் பற்றி நெஞ்சை உலுக்கும் உண்மைகளை இந்த நாவல் பேசுகிறது. இலக்கியம் பொக்கிஷம்!
எஸ்.குரு