நிலைத்த பொருளாதாரம் என்னும் முற்போக்கு சிந்தனை நூல், ஜே.சி.குமரப்பாவின் சிறைப்படைப்பு. இயந்திர மயமாதல், முதலாளித்துவம், உலக மயமாதல் என்னும் செயல்பாடுகள் வேகமாக பரவிய போது, அதை கேள்விகளுக்கு உட்படுத்தி, அதன் எதிர்கால தாக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பன்மயம் என்பது மாறி, ஒருமயமாகும் போது ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து, காந்தியின், கிராம பொருளாதாரத்தின் நன்மைகளையும் அலசுகிறது. இக்காலத்திற்கு அவசியமான நூல்.