ஆசிரியர் சுகுமாரன், 30 ஆண்டுகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் இருந்தவர். ஆசிரியர் இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றவர். தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். பல கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் போராடுகின்றனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டமாகத் துவங்கும் நாவல், இறுதியில் அரசு ஊழியர் போராட்டத்தோடு இணைந்த போராட்டமாக விரிந்து செல்கிறது.
ஆசிரியர்கள் மத்திய தர வர்க்கத்தினர், ஒயிட் காலர்ஸ், சிறை இன்னல்களுக்குத் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்று தான் நினைத்தனர். ஆனால், அவர்கள் தாக்குப் பிடித்தனர். உயிர்த் தியாகமும் செய்தனர்! ஆசிரியர்களின் சிறைச்சாலை அனுபவங்களையும் ஆசிரியர் பதிவு செய்கிறார்.
தங்கதுரை என்ற ஆசிரியரின் கண்ணோட்டமாக நாவல் விரிகிறது. தன் வகுப்பறை அனுபவங்களையும், ஆசிரியர் இயக்கப் போராட்ட அனுபவங்களின் சாரமாகவும் மட்டும் அல்ல, குடும்ப வாழ்வின் ஓட்டங்களையும் கலந்து நாவலாக்கியிருக்கிறார். தனித்துவம் வாய்ந்த சிறந்த நாவல்.
எஸ்.குரு