மனித உழைப்பின் கூட்டுச் சக்தியால் பொருட்கள், உணவு தானியங்கள் போன்ற அனைத்துப் பொருட்களும், உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது, பொதுவாக பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்; என்றாலும், அந்தக் கூட்டுச் சக்தியை ஒன்று திரட்டி அதைச் செயலுக்குக் கொண்டு வந்தனர்.
அதாவது, முன்னோடிகளைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட முன்னோடிகளில் ஒன்பது பேரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய பொதுத் தொண்டுகளையும் மிக விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
எல்.பி.சுவாமிக்கண்ணு பிள்ளை, வி.ராமதாஸ் பந்துலு, பி.ஆதிநாராயண செட்டியார், கே.தெய்வசிகாமணி முதலியார், எச்.பி.ஆரியகவுடர், என்.ஆர்.சாமியப்பா முதலியார், சந்துரு அய்யர், ஆர்.கனகசபை, டி.என்.பழனிசாமி கவுண்டர் ஆகியோர், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து வெளிப்பட்டவர்கள்.
மிகுந்த கடமை உணர்ச்சியுடன், நாட்டுப்பற்று, மக்கள் பற்று நிரம்பியவர்களாக துளிக்கூட நேர்மை தவறாதவர்களாக அவர்கள் செயலாற்றி இருப்பதைப் படிக்கும் போது, இன்றைய நிலையை எண்ணிப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட கண்ணியவான்களின் வாழ்க்கை செய்திகளைச்
சிரமம் பாராது, திரட்டித் தொகுத்தளித்த நூலாசிரியரின் பணி பாராட்டுக்குரியது.
– மயிலை சிவா