இலக்கிய ரசனையில் சமூக ரசனையும், சமூக ரசனையில் இலக்கிய ரசனையும் கலந்தே இருப்பது பற்றிய, மனம் திறந்த பேச்சு இப்புத்தகம். நல்ல மனித பண்புகளை அமைப்பதில், ஆன்மிக மதிப்புகளுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும், ஆன்மிக கலாசாரத்தில் கலை, இலக்கியம், மதம் அரசியல் போன்றவை அடங்குகின்றன என்பதையும், இந்த நூல் பல கோணங்களில் விளக்குகிறது.
இலக்கியம் என்பது, வாழ்க்கையில் இருந்து தான் பிறக்கிறதே தவிர, வாழ்க்கை என்பது இலக்கியத்தில் இருந்து பிறக்கவில்லை. அது போல, தத்துவம் என்பது, வாழ்க்கையில் இருந்து தான் பிறக்கிறது என்பதும், தத்துவங்களில் இருந்து வாழ்க்கை பிறக்கவில்லை. சமூகம் அமையவில்லை என்பதும், வாழ்க்கையின் இயக்க இயல் அவ்வக்கால நிலைமைகளினூடே தான் மக்களாய், நெசவாகிறது என்பதும், இந்த நூலின் மூலம், நாம் அறியும் செய்தி. இலக்கியம் வாழ்க்கையின் மறு பதிப்பாக கொள்ளப்பட்டாலும், வாழ்க்கை எப்படி இருந்தால், நன்றாயிருக்கும் என்ற யோசனையும் கொண்டிருக்கிறது.
அது, ‘தனி மனிதர்களையும், சமூக மனிதர்களாகவும் செயல்படும் கலைஞர்களால் உருவாகிறது...’ என்கிறார் பொன்மணி. சிறந்த திறனாய்வு நூல்.
– எஸ்.குரு