இருண்ட தமிழகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுனர்களை விழிப்புக்கும், வெளிச்சத்துக்கும் அழைத்து வந்த அறிஞர் அண்ணாதுரை, பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய, ஆற்றல் மிகு கட்டுரைகளை தொகுத்து, இவற்றில் வழங்கப்பட்டுள்ளன. அக்கால சமூக, பொருளாதார, மொழி, இன உணர்வு பற்றியவை.
தொகுதி –1: குடியரசு 29.8.1937ல் எழுதிய, ‘பார்ப்பனர்களும் யூதர்களும்’ கட்டுரை துவங்கி, 27.7.1947ல் எழுதிய, ‘சிலந்தியும் சிவனும்’ ஈறாக, 50 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. ‘சமூக சீர்திருத்தத்துக்கான வழி – இந்தியாவை பொறுத்தவரையில், சுவர்க்கத்துக்குள்ள வழி போல கரடு முரடானது, சங்கடமானது, ஆபத்துகள் நிறைந்தது’ (பக்., 100). ‘சுதந்திரம் என்றால், அச்சம் நீங்கிய மக்கள்; ஆண்மையுள்ள மக்கள், சிந்தை தெளிந்து, சீரிய கருத்து கொண்டு மக்கள் இருத்தல் என்று பொருள் தக்கதேயன்றி, சுதந்திரம் என்றால் யாரோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரிலே, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர், ஆட்சி மண்டலத்திலே கொலு வீற்றிருப்பது என்பதல்ல’ (பக்., 269). இத்தகைய விளக்கங்களை கொண்ட இத்தொகுதியில் புராணங்களை, மதக் கொள்கைகளால் நிகழும் மூட நம்பிக்கைகளை மறுக்கும் ஆணித்தரமான கருத்துக்களும் ஏராளம்.
– பின்னலூரான்