இருண்ட தமிழகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுனர்களை விழிப்புக்கும், வெளிச்சத்துக்கும் அழைத்து வந்த அறிஞர் அண்ணாதுரை, பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய, ஆற்றல் மிகு கட்டுரைகளை தொகுத்து, இவற்றில் வழங்கப்பட்டுள்ளன. அக்கால சமூக, பொருளாதார, மொழி, இன உணர்வு பற்றியவை.
தொகுதி – 2: ‘வரட்டுமே வள்ளலார்’ என, 6.2.1942ல் எழுதிய கட்டுரை முதல், ‘மானமும் மனையும்’ முடிய, 75 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
‘கண்ணன் காட்டிய வழி கவர்ச்சி மிக்கது. பால பருவத்திலே பால், தயிர், வெண்ணெய், காளை பருவத்திலே கட்டழகிகளான கோபிகையர், பின் ராஜ தந்திர ரசக்கூட்டம் இவை அவர் காட்டி வழிகள்’ (பக்., 146) போன்ற நையாண்டிகள் அரசியல் கட்டுரைகளில் காணப்படுகின்றன; பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளே இவற்றில் இடம்பெற்றுள்ளன.
– பின்னலூரான்