எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகா, திசையன்விளையில் பிறந்தவர். 2006, நவ., 9ல் தன், 86வது வயதில் மறைந்தார்.
இவரது இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. புனைப்பெயர் வல்லிக்கண்ணன். ராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியும், கிருஷ்ணனின் தமிழ்ப் பெயரான கண்ணனும் சேர்ந்து வல்லிக்கண்ணன் ஆயிற்று.
இத்துடன் நையாண்டி பாரதி, சொனாமுனா, சொக்கலிங்கம், கெண்டையன்பிள்ளை, கோரநாதன், மிவாங்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம், இளவல் ஆகிய பெயர்களிலும் வல்லிக்கண்ணன் எழுதினார்.
சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
வல்லிக்கண்ணனின் வாழ்க்கைச் சுவடுகளும், இலக்கிய அனுபவங்களுமாக அமைந்துள்ளது. அவரது தன் வரலாறும், இலக்கிய அனுபவங்களும், சமூக அக்கறை கொண்ட ஊடகங்களைப் பற்றிய விமர்சனங்களும் இந்த நூலின் சிறப்பு அம்சம்!