சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனரான, ஏ.என்., என அழைக்கப்படும், ஆறுமுகம் நடராஜன், கரூரை அடுத்த திருவேங்கிமலையில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர்.
இயல்பிலே ஆழமான இசையறிவும், கலாரசனை யும் கொண்டவர். அவருடன், நெருங்கிப் பழகியவர்கள், அறிந்தவர்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் தொகுத்து இந்நூல் வெளி வந்துள்ளது. இந்நூலின் முதல் கட்டுரையே முத்தாய்ப்பாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன், ஏ.என்.,னுக்கு இருந்த நட்பு எடுத்துகாட்டும் விதத்தில் உள்ளது. வானொலியில், கவியரங்கம் நடத்திய நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார் (பக். 9). தொகுப்பாசிரியர் தன் வாழ்வில் ஏ.என்., பெற்றிருந்த இடத்தை விளக்கும்போது, ‘எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தாலும், இவர் என்னுடன் சேர்ந்த பின், அது அதிகமாகியது’ என, குறிப்பிடுகிறார்.
இலக்கியக் கலைவிழாக்கள், இசை நிகழ்வுகள் புத்தக வெளியீடுகள் குறித்த அனுபவங்கள், இந்நூலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.