தானம் செய்வதால் உண்டாகும் பயன்கள், சாஸ்திரம் கூறும் காலமும் நேரமும், சுப சகுனங்கள், அப சகுனங்கள், இந்து தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள், எந்த காரியம் நடக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், இந்துக்கள் பசுவை வணங்குவது ஏன்?
பாவை நோன்பு, பிரதோஷ வழிபாடு முறை, அங்கப்பிரதட்சணம், காவி உடையின் தத்துவம் இவ்விதமாக புராணங்கள், ஜோதிட நூல்கள், நீதி நூல்கள் போன்ற பலவற்றிலிருந்தும் சேகரித்து கொடுக்கப்பட்டுள்ள இந்நூல், பொதுவாக எல்லாரும் படிக்கும் வகையில் உள்ளது.
இது போன்று ஏராளமான நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன எனினும், கடைபிடிப்பது சாத்தியமா என்பதும் கேள்விக்குறியே.
அதற்கான நூல்களும் வந்தால் சமுதாயத்திற்கு பயன்படும்.
– பின்னலூரான்