தமிழ் மூதாட்டி அவ்வையாரின் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும், தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவையான இரண்டு கண்கள் என்று சொல்லலாம்.
அதை சரியாக படிக்காததாலும், கடை பிடிக்காததாலும் இன்று தமிழ்ச் சமுதாயம் பரிதாப நிலையில் உள்ளது என்று கூறலாம்.
இந்நூல், அவ்வையாரின் கொன்றைவேந்தனை விளக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அவ்வையார் பெற்றோரை நேரடி தெய்வமாக ஏற்க வைத்து, அதன் மூலம் இறையுணர்வு ஊட்டுகிறார் என்று கூறுவதும் (பக். 2), ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்றும் (பக். 12).
வேதம் ஓதுபவர்களை, பொருளாதார ரீதியில் வளம் படுத்த வேண்டும் என்றும் (பக். 22) குற்றத்தை விடத்து குணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் (பக். 36), உணவு உற்பத்தியில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர வேண்டும் என்றும் (பக். 58).
குற்றத்திலிருந்து தப்பிக்க வழி காண்பதே அறிவுடைமை என்றும் (பக். 86) நம் உழைப்பே நம் வாழ்வின் மூலதனம் என்றும் (பக். 138).
இன்றைய மூத்தவர்களில் பலர் கேள்விக்குறியாக மாறி தன்மானம் காத்து, தலை நிமிர்ந்து வாழ்வோம் என்று கூறுவதும் (பக். 170) நூலாசிரியரின் சமுதாய முன்னேற்றச் சிந்தனைகளை விளக்குவனாக உள்ளன. நம்மனத்தைப் பண்படுத்த உதவும் பயனுள்ள நூலாக உள்ளது.
– டாக்டர் கலியன் சம்பத்து