அமுதசுரபி, 70ம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தீபாவளி மலருக்கு என்னென்ன பகுதிகள் இடம் பெற வேண்டுமோ, அத்தனை அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
ஆன்மிகம் மற்றும் பொது கட்டுரைகள், இசை கலைஞர்கள் பற்றிய சிறப்பு கட்டுரை, குழந்தை உண்டாக டாக்டர்கள் அறிவுரை, வியக்க வைக்கும் ரஷ்ய சர்க்கஸ் பற்றி ராணி மைந்தன் எழுதிய, சீனப் பெருஞ்சுவரின் சிரிப்பு யோகா, ரஷ்ய தமிழ் சங்கத்தின் அழைப்பை ஏற்று ரஷ்யா சென்று வந்த, கு.ஞானசம்பந்தன் எழுதிய ரஷ்ய சர்க்கஸ் பற்றிய கட்டுரை, காலஞ்சென்ற இசையமைப்பாளர், எம்.எஸ்.வி., பற்றிய கட்டுரை ஆகியவை, ரசிக்கும்படி இருக்கின்றன.
இதுதவிர, கவிதைகள், சுவாமி படங்கள் இதழுக்கு மெருகூட்டுகின்றன. குறிப்பாக, ஓவியர், பத்மவாசன் தீட்டிய அட்டைப்படம் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி உள்ளது.