துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது.
இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.
முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது.
இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் முதலியவற்றை தெரிவிக்கிறது.
மூன்றாம் பகுதி – துளசியின் மருத்துவ குணங்கள், தெய்வீக மூலிகையான துளசியைப் பயன்படுத்தினால் கட்டுப்படும் நோய்கள், சுற்றுச்சூழலில் துளசியின் முக்கியத்துவம் ஆகியவை விளக்கப்படுகின்றன. அனைவருக்கும் பயன்படக்கூடிய நுால்.
– மயிலை சிவா