அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் எனும் கடலோரக் கிராமம். சிவாலயமும், வைணவக் கோவிலும், முகம்மதியப் பள்ளிகளும் அருகருகே இருந்தன.
போட்டி பொறாமையின்றி அமைதியுடன் வாழ்ந்து வந்த தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம் அந்தத் தீவு. ஆபுல் – காபுல் ஒலியுல்லா தர்க்கா என்னும் தொழுகை இடம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அவர்கள் ஆதாமின் மக்கள் என்று திருமறை உரைக்கிறது. கலாம் சிறுவயதில் அங்குள்ள ஆலமரத்தடியில் விளையாடுவாராம்.
இதுபோன்ற செய்திகள் அன்பு மகன் எனும் தலைப்பிலும், ஆண்டுதோறும் பங்குனித் தெப்ப உற்சவம் வெகு விமரிசை. அன்று ராமர் – சீதை திருமண வைபோகம் ராமேஸ்வரத்தில் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கலாம் வீட்டருகே ஒரு, ராம தீர்த்தக் குளம் இருந்தது. அதன் நடு மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். அப்போது கரையிலிருந்து, ராமர் விக்ரகம் தெப்பத்திற்கு எடுத்துச் செல்லும் படகு சேவை செய்பவர், கலாம் தந்தை தான்.
அவரே இந்தத் திருக்காரியங்களில் படகை ஓட்டி உதவுபவர் என்ற செய்தி உள்ளபடியே, அப்துல் கலாமும், அவரது குடும்பமும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பலரது எண்ணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
அதோடு நின்று விடாமல், கலாமை பொருத்தமட்டில் அவர் சுத்த சைவம். இந்துக் குடும்பங்களுடனான தொடர்பும், நெருக்கமும் பிற்காலத்தில் அவருக்கு, ‘கலாம் அய்யர்’ என்ற சிறப்புப் பெயர் வழங்க ஏதுவாயிற்று.
டில்லி, விமானத் தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் உற்பத்தி இயக்கம் வந்தபோது, கைமேல் பதவி, நியமன ஆணை, முது அறிவியல் ஆய்வு உதவியாளர் பொறுப்பு. அப்போது, அப்துல் கலாமுக்கு மாதம், 250 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டது.
இவ்வாறாக எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் லட்சிய பயணத்தோடு பயணித்து, இளைஞர்களின் எழுச்சி நாயகனாகி உலக வரலாற்றில் இடம் பிடித்த, அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சிறிய பதிவாக, நல்ல படங்களுடன் அனைவரும் விரும்பி வாசிக்கும் வகையில் இந்நுால் அமைந்திருப்பது.
– முனைவர் க.சங்கர்