சமயம் சார்ந்த பிள்ளைத் தமிழ் நுால்கள் பற்றி ஆய்வு செய்து, பின் தெய்வீகத் திருத்தலங்கள் என்னும் நுாலையும் எழுதிய நுாலாசிரியர், இந்நுாலில் அகத்தியர் தென்னாட்டில் தங்கி விட்ட கதை துவங்கி, மகாபாரதம், ராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், விநாயகப் புராணம், திருவிளையாடல் புராணம் என புராணக் கதைகள், 77 அடங்கி உள்ளதாக வடிவமைத்துள்ளார்.
இரண்டு இரண்டு பக்கங்களுக்குள் இக்கதைகளை எளிய நடையில் சுருக்கி, சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். பெரும்பாலானவை அறிந்த கதைகள் தான். எனினும், ஒவ்வொரு கதையின் முடிவிலும் நுாலாசிரியர் அறிவுறுத்த விரும்பும் நீதிபோதனை அல்லது பண்பாடு குறித்த தகவல் என்ன என்பதை, அடுத்த பதிப்பிலாவது சுருங்கக் கூறினால் பயனுடையதாக அமையும்.
– பின்னலுாரான்