இந்த நுாலை சிறுகதைகள் தொகுப்பு என சொல்வதை விட, பெண் உரிமைக்கு குரல் கொடுக்கும் சம்பவங்கள் என்றே கூற வேண்டும்.
குறிப்பாக, கற்பு என்ற கதையில், தன் புருஷனிடம் கஸ்துாரி கேட்கும் கேள்விகள், ஆண்களுக்கு எதிரான சரியான, ‘பஞ்ச்!’ பாதிக்கப்பட்ட பெண்கள், கடைசியில் பொங்கி எழுவது போல் ஆசிரியர் எழுதியுள்ளது மிகச் சிறப்பு. இந்த நுாலை முழுமையாக படித்த பின், பெண்களுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது நிச்சயம்.