வடமொழியில் உள்ள புராணங்கள், 18. இதில், 18வது புராணமாக விளங்கும் வாவிய புராணம், பிரமா புராணம் என்றும் பிரமாண்ட புராணம் என்றும் பெயர் பெறும். இது, 12 ஆயிரம் கிரந்தங்களைக் கொண்டது.
இதில் ஒரு பகுதி கவுமார சங்கிதை. கவுமார சங்கிதையில் ஒரு பகுதி குமார காண்டம். இந்த குமார காண்டத்தில் பேசப்பட்டது ஆதிபுரமான்மியம் (அதாவது, பேரூர்த் தலத்தின் பெருமை) இதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பேரூர்ப் புராணம் என்னும் பெயரில் தந்தவர் கவிராட்சசர் கச்சியப்ப முனிவர்.
புராணம் என்பது பழங்கதை என பொருள்படும். அந்த வகையில் பேரூரும், அங்கு எழுந்தருளிய சிவலிங்க மூர்த்தமும், எவ்வளவு பழமை உடையவை என்பது குறித்து அறிந்து கொள்ள, கச்சியப்பரே இந்நுாலில் ஒரு வாய்ப்பாக அளித்து உள்ளார்.
அது காமதேனு வழிபாடு படலத்தில் சொல்லப்பட்டுள்ளது. நம் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புளூட்டோ என்ற கோள் சூரியனிலிருந்து, 320 கோடி மைல்கள் தொலைவில் உள்ளது.
இப்போது புளூட்டோவிலிருந்து, 20 மடங்கு தொலைவில் ஒரு கோள் சூரியனைச் சுற்றி வருவதாக கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கான்ஸ்டான்டின்படிகின், மைக்பிரவுன் ஆகியோர் கண்டு கூறியுள்ளனர் என்பது போன்ற செய்திகளுடன், பேரூர்ப் புராணம், 36 படலங்களையும், 2,220 பாடல்களையும் கொண்டு நடக்கிறது. அர்த்தமுள்ள தகவல்கள் அணிசேர்க்கின்றன.
– முனைவர் க.சங்கர்